30 வயதில் ஏற்படும் சரும பிரச்னைக்கு எளிய தீர்வு

சூழலியல் மாற்றங்களால் சரும பிரச்னைகள் இப்போது இளம் வயதிலேயே அதிகரிக்க தொடங்கிவிட்டன. அதிலும் 30 வயதுக்கு மேல் சருமம் பெரிதும் பாதிப்படைந்து புதிய செல்கள் உருவாவதில் சிக்கல் ஏற்படுகின்றது. 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முட்டை மூலம் பல வழிகளில் சருமத்தை பாதுகாக்க வழிகள்

முக சுருக்கத்தினை போக்க

முட்டையின் மஞ்சள் கருவை எடுத்து நன்றாக அடித்து அதனுடன் நன்கு பழுத்த வாழைப்பழத்தை மசித்து சேர்த்துக்கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு ஸ்பூன் பாதாம் எண்ணெய்யை கலந்து முகத்தில் மசாஜ் செய்து அதை அப்படியே பேஸ் பேக் போல போட வேண்டும். அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகம் கழுவ வேண்டும். வாரம் இருமுறை இப்படி செய்தால் சருமத்தில் புதிய செல்கள் உருவாவதற்கு தூண்டும். இது தளர்வடைந்த சருமத்தை இறுக்கி சுருக்கம் கருமை ஆகியவற்றை மறையச் செய்யும்.

முகம் பளிச்சிட

முட்டை வெள்ளைக் கருவுடன் 1 ஸ்பூன் தேன் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவுங்கள். காய்ந்ததும் முகம் கழுவவும். அதேபோல முட்டையில் வெள்ளைக் கருவுடன் 2 ஸ்பூன் கடலை மாவு 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் மாஸ்க் போல் போடலாம். இது முகத்தில் உள்ள அழுக்கை நீக்கி பொலிவு தரும். வாரம் ஒருமுறை இதை செய்யலாம்.

முகத்தை பாதுகாக்க

முட்டையின் வெள்ளைக் கருவுடன் முல்தானி மட்டியை கலந்து பேக்காக முகத்தில் போடலாம். சருமம் நன்றாக இறுகியவுடன் கழுவுங்கள்.  2 ஸ்பூன் கேரட் சாறுடன் ஒரு முட்டையின் வெள்ளைக் கருவை கலந்து முகத்தில் போடலாம். இது எல்லாம் முகத்தை 30 வயதுக்கு மேல் பாதுகாக்க உதவும்.

Google+ Linkedin Youtube