உலக செய்திகள் | tutinews

20 லட்சத்துக்கும் அதிகமான புலம்பெயர்ந்தவர்கள் வெளிநாடுகளில் சிக்கியுள்ளனர்: ஐ.நா.

கரோனா வைரஸ் தொற்றுநோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பல நாடுகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், நாடு திரும்ப விரும்பிய 20 லட்சத்துக்கும் அதிகமான புலம்பெயர்ந்தோர் வெளிநாடுகளில் சிக்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இத்தாலியில் கரோனா பாதிப்பு 3,33,940 ஆக அதிகரிப்பு

இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் 3, 678 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இத்தாலியில் கரோனா பாதிப்பு 3,33,940 ஆக அதிகரித்துள்ளது.

வடகொரியாவை விமர்சித்த ஐ.நா.

வடகொரியா தனது அணுசக்தி சோதனைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சர்வதேச பொருளாதாரத் தடைகளை மீறுகிறது என்று ஐக்கிய நாடுகள் சபை விமர்சித்துள்ளது.

சவுதி அரேபியாவில் வேலை இழந்து வீதிகளில் யாசகம் கேட்டதால் 450 இந்தியர்களுக்கு சிறை

தெலங்கானா, ஆந்திரா, உ.பி., காஷ்மீர், பிஹார், டெல்லி, ராஜஸ்தான், கர்நாடகா, ஹரியாணா, பஞ்சாப், மகாராஷ்டிராவைச் சேர்ந்த இந்தியர்கள் பலர் சவுதி அரேபியாவின் பல நிறுவனங்களில் வேலை செய்து வந்தனர்.

கரோனாவுக்கு உலகம் முழுவதும் 1000 செவிலியர் உயிரிழப்பு

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் காரணமாக 1000 செவிலியர் உயிரிழந்திருக்கிறார்கள் என்று செவிலியருக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆக்ஸ்போர்ட், அஸ்ட்ராஜென்கா கரோனா தடுப்பு மருந்தின் 3-ம் கட்ட பரிசோதனை மீண்டும் தொடக்கம்: பிரிட்டன் சுகாதார அமைப்பு அனுமதி

ஆக்ஸ்போர்ட், அஸ்ட்ராஜென்கா நிறுவனத்தின் கரோனா தடுப்பு மருந்தின் 3-ம் கட்ட பரிசோதனை நிறுத்தப்பட்ட சூழலில், மீண்டும் தொடங்குவதற்கு பிரிட்டனின் மருத்துவ சுகாதார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதியளித்துள்ளது.

ரஷ்ய அதிகாரிகளால் அலெக்ஸி நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டதற்கான வாய்ப்புகள் உள்ளன: அமெரிக்கா

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னிக்கு ரஷ்ய உயர் அதிகாரிகள் விஷம் வைத்ததற்கு கணிசமான வாய்ப்புகள் உள்ளன என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ கூறியுள்ளார்.

2021 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பெயர் பரிந்துரை

2021ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: உயிர் பிழைத்த துணை அதிபர்

ஆப்கானிஸ்தான் துணை அதிபர் அம்ருல்லா சலே, தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலிலிருந்து உயிர் பிழைத்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

பிரேசில் அதிகரிக்கும் கரோனா மரணம்

பிரேசிலில் கரோனாவினால் ஏற்படும் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 330 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

ஜப்பானை மிரட்டும் ஹாய்ஷென் சூறாவளி 8.1 லட்சம் மக்கள் வெளியேற்றம்

ஜப்பானின் தெற்கு பகுதியை நோக்கி ஹாய்ஷென் சூறாவளி நெருங்கி வரும் நிலையில் 8.1 லட்சம் மக்களை அரசு வெளியேற்றி உள்ளது.

உலக சுகாதார அமைப்புக்கு நிலுவைத் தொகை; 62 மில்லியன் டாலருக்கு மேல் தர முடியாது: ட்ரம்ப் திட்டவட்டம்

உலக சுகாதார அமைப்புக்குத் தர வேண்டிய நிலுவைத் தொகையில் 62 மில்லியன் டாலருக்கு மேல் செலுத்த முடியாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.