தமிழ்நாடு செய்திகள் | tutinews

ஆகஸ்ட் 10ம் தேதி தமிழகம் முழுவதும் காய்கறிகள் மற்றும் பழ கடைகள் முழு அடைப்பு

தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 10ம் தேதி ஒருநாள் மட்டும் காய்கறிகள் மற்றும் பழ கடைகள் முழுவதும் அடைக்கப்படும் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் இன்று 5,609 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 1,021 பேர் பாதிப்பு: காஞ்சிபுரமும் 10,000-ஐ கடந்தது

தமிழகத்தில் இன்று 5,609 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் சென்னையில் 1,021 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக தமிழகத்தில் கரோனாவால் உயிரிழப்பு 100-ஐத் தாண்டியுள்ளது.

புதிய கல்விக்கொள்கையை தமிழக அரசு முழுமையாக எதிர்க்க வேண்டும்

புதிய கல்விக்கொள்கையை தமிழக அரசு முழுமையாக எதிர்க்க வேண்டும் என்று முதல்வருக்கு திமுக கூட்டணி கட்சிகள் கடிதம் எழுதியுள்ளன.

தமிழகத்தில் 5,881 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 1,013 பேர் பாதிப்பு: 1 லட்சத்தை நெருங்கும் சென்னை

தமிழகத்தில் அதிக அளவில் 5,881 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், 2 லட்சத்தை தமிழகம் கடந்து மொத்தம் 2,45,859 என்கிற எண்ணிக்கையில் உள்ளது.

ஆன் - லைன் வகுப்புகளுக்கு தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள்

கொரோனா பரவல் காரணமாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டிருக்கும் நிலையில் ஆன் - லைனில் வகுப்புகளை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டிருக்கிறது தமிழ்நாடு அரசு.

ஆகஸ்டு 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

தமிழ்நாட்டில், ஆகஸ்டு 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகவும், ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கம் போல் எந்த தளர்வுகளும் கிடையாது என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.

தமிழகத்தில் 5,864 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 1,175 பேர் பாதிப்பு: 97 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் அதிக அளவில் 5,864 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், 2 லட்சத்தை தமிழகம் கடந்து மொத்தம் 2,39,978 என்கிற எண்ணிக்கையில் உள்ளது.

பள்ளிக்கல்வித்துறை ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை

ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் தனியார் தொலைகாட்சிகள் மூலம் பாடங்கள் ஒளிபரப்பப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக இறுதியாண்டு, செமஸ்டர் தேர்வு ரத்து செய்யும் திட்டமில்லை

பல்கலைக்கழக இறுதியாண்டு, செமஸ்டர் தேர்வு ரத்து செய்யும் திட்டமில்லை என்று உச்சநீதிமன்றத்தில் யுஜிசி தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் பிளாஸ்மா சிகிச்சை எப்படி செய்யப்படுகிறது?

கோவிட் - 19 நோயிலிருந்து மீண்டவர்களின் ரத்த பிளாஸ்மாவைப் பயன்படுத்தி, அந்நோய்க்குக் சிகிச்சையளிக்கும் முயற்சிகளைத் துவங்கியிருக்கிறது தமிழக சுகாதாரத் துறை.

10 ஆயிரம் எண்ணிக்கையைக் கடந்த மாவட்டங்களில் இணைந்தது மதுரை; தமிழகத்தில் இன்று 6,993 பேருக்குத் கரோனா தொற்று: சென்னையில் 1,138 பேர் பாதிப்பு

தமிழகத்தில் முதன்முறையாக அதிக அளவில் 6,993 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், 2 லட்சத்தை தமிழகம் கடந்து மொத்தம் 2,20,716 என்கிற எண்ணிக்கையில் உள்ளது. சென்னையில் 1,138 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கார்ப்பரேட்டுகளுக்கு 'கார்ப்பெட்' விரிக்கும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கை 2020-ஐ திரும்பப் பெறுக; ஸ்டாலின் வலியுறுத்தல்

கார்ப்பரேட்டுகளுக்கு 'கார்ப்பெட்' விரிக்கும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கை 2020-ஐ மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இட ஒதுக்கீடு விவகாரம்: இது சமூக நீதிக்கான போர்; அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களைப் பாதுகாத்திட குரல் கொடுங்கள்; 11 தலைவர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

உரிமையை இழந்துள்ளவர்களின் உரிமைகளுக்காகவும் இட ஒதுக்கீடு தொடர்பான அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களைப் பாதுகாத்திடவும் குரல் கொடுக்க வேண்டும் என, சோனியா காந்தி உள்ளிட்ட 11 தலைவர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.