விளையாட்டு செய்திகள் | tutinews

இந்திய கிரிக்கெட் வாரியம் :உள்நாட்டு வீரர்கள் பயிற்சியை தொடங்க நடைமுறைகள் அறிவிக்கப்பட்டது

உள்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் பயிற்சியை தொடங்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய நிலையான வழிகாட்டுதல் நடைமுறைகளை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பயிற்சி முகாமில் பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாநில அணிகள் கிரிக்கெட் பயிற்சியைத் தொடங்க பிசிசிஐ வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் : 60 வயதுக்கு மேல் தடை உள்பட புதிய கட்டுப்பாடுகள்

மாநிலங்களில் உள்ள அணிகள் தங்களுக்கு உரிய பயிற்சி மையங்களில் வீரர்களுக்கு கிரிக்கெட் பயிற்சியைத் தொடங்க, மாநில நிர்வாகங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு அமைப்பு (பிசிசிஐ) நேற்று வெளியிட்டுள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொரோனாவினால் பாதிக்கப்படுபவருக்கு பதிலாக மாற்று வீரர்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் எந்த வீரராவது கொரோனாவினால் பாதிக்கப்பட்டால் மாற்று வீரர்களை பயன்படுத்திக் கொள்ள ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இலங்கை பிரீமியர் லீக் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் விளையாட முடிவு

இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் இலங்கை பிரீமியர் லீக் போட்டியில் விளையாட முடிவு செய்துள்ளார்.

தேசிய விளையாட்டு விருதுகள் தேர்வுக்குழுவில் விரேந்திர சேவாக்

இந்திய ஹாக்கியின் லெஜண்ட் தயான் சந்த் பிறந்த தினமான ஆகஸ்ட் 29ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கப்படும்.

விரேந்திர சேவாக் போல் ஆடுங்கள் : சச்சினிடம் தான் அடிக்கடி கூறியதாக கபில் தேவ் மனம்திறப்பு

டெஸ்ட், ஒருநாள், டி20 என்று எந்த கிரிக்கெட்டாக இருந்தாலும் சேவாகின் அணுகுமுறை மனத்தடை இல்லாத ஒரு அணுகுமுறை, ‘பந்தைப் பார் அடி’ என்பதுதான் அவரது எளிமையான அணுகுமுறை ஆனால் எளிமை எப்போதும் கடினமே.

ஐசிசி ஒருநாள் தரவரிசை: அசைக்கமுடியாத இடத்தில் கோலி, ரோஹித், பும்ரா: ஆல்ரவுன்டரில் ஒரு இந்திய வீரருக்கு மட்டுமே இடம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) வெளியிட்ட ஒருநாள் தரவரிசைக்கான பட்டியலில் பேட்ஸ்மேன்கள் வரிசையில் விராட் கோலி, ரோஹித் சர்மா அசைக்க முடியாத இடத்தில் இருந்து வருகின்றனர்.

2023-ம் ஆண்டு உலக கோப்பை தகுதிக்கான சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டி 30-ந் தேதி தொடக்கம்

2023-ம் ஆண்டு உலக கோப்பை தகுதிக்கான சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந் தேதி தொடங்கும் என்று ஐ.சி.சி. நேற்று அறிவித்தது.

பிசிசிஐ தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா பதவிக் காலம் முடிந்தது: மீண்டும் தொடர முடியுமா?

பிசிசிஐ தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா ஆகியோரின் பதவிக்காலம் முடிந்த நிலையில் அவர்களுக்குப் பதவி நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதா அல்லது பதவியிலிருந்து விலகுவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஐ.சி.சி. தலைவர் பதவிக்கு கங்குலி பொருத்தமானவர்

ஐ.சி.சி. தலைவர் பதவிக்கு இந்திய முன்னாள் கேப்டன் கங்குலி பொருத்தமானவராக இருப்பார் என்று இலங்கை முன்னாள் வீரர் சங்கக்கரா கூறியுள்ளார்.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 19-ந்தேதி தொடக்கம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 19-ந்தேதி தொடங்க இருப்பதை ஐ.பி.எல். சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் உறுதி செய்துள்ளார்.

கோக் அதிகமாகக் குடிக்கிறார், சிங்கிள்தான் எடுக்கிறார்: ‘தாதா’ஆவதற்கு முன்பு கங்குலி மீதான அதிருப்திகள்- முன்னாள் தேர்வாளர் பேட்டி

கேப்டன்சியிலிருந்து சச்சின் டெண்டுல்கர் ராஜினாமா செய்த பிறகு சவுரவ் கங்குலி இந்திய கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக கங்குலி நீடிக்க முடியுமா?

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக கங்குலி தொடர்ந்து நீடிக்க முடியுமா? என்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டு விரைவில் முடிவு செய்கிறது.

ஐ.பி.எல். கிரிக்கெட் அடுத்த வாரத்தில் போட்டி அட்டவணை அறிவிப்பு

இந்தியாவில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக இந்த ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த வாரத்தில் போட்டி அட்டவணை முடிவு செய்து அறிவிக்கப்படும்.

மகாயா நிடினியுடன் ஆடிய வீரர்கள் மீது இருந்த மதிப்பு போய்விட்டது: டேரன் சமி விளாசல்

390 விக்கெட்டுகளை எடுத்த தென் ஆப்பிரிக்கா மண்ணின் மைந்தன் மகாயா நிடினி தான் ஆடிய காலக்கட்டத்தில் தன்னை சக வீரர்கள் ஒதுக்கியே வைத்திருந்தனர் என்றும் தனிமையே தன் கதி என்றும் வேதனையுடன் பெரிய பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.