இந்தியா செய்திகள் | tutinews

கர்ணன் தெலுங்கு ரீமேக்... விருப்பம் தெரிவித்த இளம் ஹீரோ!

தெலுங்கு சினிமாவின் இளம் ஹீரோ பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ், கர்ணனின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க விருப்பம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

நாளை தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட வாய்ப்பு - காரணம் என்ன?

கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், பல தொகுதிகளில் 30க்கும் மேற்பட்ட சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படும் நிலையில், தேர்தல் முடிவு வெளியாவதில் தாமதமாகும் எனத் தெரிகிறது.

ஐபிஎல்: சென்னை - மும்பை அணிகள் இன்று பலப்பரிட்சை!

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் இன்றைய ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இண்டியன்ஸ் அணியும், 3 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

கொரோனா பரவல் அச்சம் : இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா சென்றால் 5 ஆண்டுகள் சிறை

கொரோனா பரவல் காரணமாக இந்தியாவிலிருந்து திரும்பும் ஆஸ்திரேலியர்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது கடுமையான அபராதம் விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

திமுக வெற்றியடைந்த செய்தியை வீடுகளுக்குள் கொண்டாடுங்கள்; வீதிகளில் அல்ல - மு.க.ஸ்டாலின்

இல்லங்களிலேயே இருந்து தேர்தல் முடிவுகளை ஊடகங்களின் மூலம் தெரிந்து கொள்வதும், வெற்றியடைந்த செய்தியைக் கேட்டு நம் இல்லத்திலேயே மகிழ்வதும்தான் பொருத்தமான போக்கு என்று தெரிவித்துள்ளார் மு.க.ஸ்டாலின். 

6 பந்துகளில் 6 பவுண்டரி விளாசிய பிரித்வி ஷா.! 'இறுக' அணைத்து ‘ரிவெஞ்ச்’ எடுத்த ஷிவம் மாவி!

நேற்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் எளிதாக வெற்றி பெற்றது.

'அடங்க மறு' இயக்குநரோடு இணையும் நடிகர் விஷால்!

விஷால் நடிக்கும் அடுத்த படத்தை, இயக்குநர் கார்த்தி தங்கவேல் இயக்குவது உறுதியாகி உள்ளது. 'சக்ரா' படத்தை தொடர்ந்து ஆனந்த் ஷங்கர் இயக்கும் 'எனிமி' என்ற படத்தில் விஷால் நடித்து வருகிறார்.

கொரோனா முன்னெச்சரிக்கை - ’சூர்யா 40’, ’விக்ரம் 60’, ’டான்’ படப்பிடிப்புகள் நிறுத்தம்!

கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக ’சூர்யா 40’, ’விக்ரம் 60’, சிவகார்த்திகேயனின் ’டான்’ ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 3,645 பேர் பலி - உயிரிழப்பு விகிதம் 1.12% ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 3,645 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில் தெரியவந்துள்ளது.

கோவா: ஏப்ரல் 29 இரவு முதல் மே 3 ஆம் தேதி வரை பொது முடக்கம்

கோவாவில் ஏப்ரல் 29 ஆம் தேதி இரவு 7 மணி முதல் மே 3 ஆம் தேதி காலை வரை பொது முடக்கம் அமலில் இருக்கும் என அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.

ஐபிஓ மூலம் 8250 கோடி ரூபாய் திரட்ட சொமேட்டோ நிறுவனம் விண்ணப்பம்!

அண்மையில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் வீட்டு முறை உணவை டெலிவரி செய்யும் வகையில் புதிய சேவையையும் சொமேட்டோ தொடங்கி உள்ளது.

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி - ஆன்லைனில் பதிவுசெய்யும் முறை தொடங்கியது

18 வயதிற்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள இன்று மாலை 4 மணி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியன் 2 பிரச்னையை பேசித்தீர்க்க முடியவில்லை - ஷங்கர்

இந்தியன் - 2 படத்தை முழுமையாக முடித்து கொடுக்காமல் இயக்குநர் ஷங்கர் பிற படங்களை இயக்க தடை விதிக்கக்கோரி லைகா நிறுவனம் சார்பில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்தியா: 2 லட்சத்தை கடந்தது கொரோனா இறப்பு

நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்தது. கடந்த 24 மணிநேரத்தில் 3 லட்சத்து 60 ஆயிரத்து 960 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மே 2ல் வாக்கு எண்ணிக்கை...முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் - சத்யபிரதா சாகு

வாக்கு எண்ணிக்கைக்கு வரும் வேட்பாளர்களின் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகு உத்தரவிட்டுள்ளார்.

மே 2-ல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை.. அரசியல் கட்சிகளுக்கு கடிவாளம்.. தேர்தல் ஆணையம் அதிரடி!

மே 2-ல் வாக்கு எண்ணிக்கையின்போது அரசியல் கட்சியினர் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.