கருணாநிதி நினைவிடத்திற்கு நிபந்தனைகளுடன் அனுமதி

திமுக முன்னாள் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சருமான கலைஞர் மு.கருணாநிதி கடந்த 2018 ம் ஆண்டு மறைந்தார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள அண்ணா நினைவிடம் அருகே அரசு மரியாதையுடன் புதைக்கப்பட்டது.

அங்கு அவருக்கு நினைவிடம் கட்ட தற்போது ஆட்சி பொறுப்பேற்றுள்ள திமுக அரசு நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பை வெளியிட்டது.

இந்நிலையில் தற்போது அப்பகுதியில் கலைஞர் நினைவிடம் அமைக்க மாநில கடற்கரை மண்டல ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதனால் நினைவிட கட்டிட பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதற்கட்டமாக 2 பெவிலியன், 2 கேலரிகள், 4 நீர்குளங்கள், கியாஸ் பம்ப் அறை, கழிப்பறை என ஏற்கெனவே அனுமதி பெறப்பட்ட 160 செண்ட் பரப்பளவில் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Google+ Linkedin Youtube