ஏர் சார்ஜிங் - தொடர்ந்து பேட்டரி விஷயத்தில் கலக்கும் MI

 சீனாவில் அறிவுசார் சொத்துகளை நிர்வகிக்கும் China National Intellectual Property Administration (CNIPA)-யிடம் ஒலியை வைத்து மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்யும் வகையிலான புதிய தொழில்நுட்பத்துக்கான காப்புரிமைக்கு விண்ணப்பித்திருக்கிறது Xiaomi. ஒலி அலைகளால் ஏற்படும் அதிர்வுகளை மின்சாரமாக மாற்றி பின்னர், அதனைக் கொண்டு மின்னணு சாதனங்கள் சார்ஜ் செய்யும் வகையில் அதன் செயல்பாடு இருக்கும் எனத் தெரிகிறது. சார்ஜிங்கில் புதிய தொழில்நுட்பத்தை ஷாவ்மி செயல்படுத்துவது இது முதல் முறை அல்ல. கடந்த ஜனவரி மாதமும் 'ஏர் சார்ஜிங்' என்ற புதிய தொழில்நுட்பத்தையும் Xiaomi அறிமுகப்படுத்தியிருந்தது. பாஸ்ட் சார்ஜிங்கில் 200W கொண்டு 4000mAh பேட்டரியை எட்டு நிமிடத்தில் சார்ஜ் செய்து காட்டி அசத்தியிருந்தது Xiaomi .

200W கொண்டு 4000 mAh பேட்டரியைக் கொண்ட, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட Mi 11 Pro, 44 நொடிகளில் 10 சதவிகிதமும், 3 நிமிடத்தில் 50 சதவிகிதமும், 8 நிமிடத்தில் முழுவதுமாகவும் சார்ஜ் செய்ய முடிந்தது. அதே போல் 120W வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுடபம் மூலம், அதே 4000 mAh பேட்டரியை 15 நிமிடத்தில் சார்ஜ் செய்து காட்டியது Xiaomi. தற்போது ஒலியை வைத்து சார்ஜ் செய்யும் இந்த புதிய தொழில்நுட்பத்தையும் விரைவில் Xiaomiஅறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கூடவே 200W சார்ஜிங் வசதி கொண்ட சாதனங்களையும் சந்தையில் அறிமுகப்படுத்தும் முனைப்பில் இருக்கிறது.

Google+ Linkedin Youtube