அசத்தல் தோற்றம் கொண்ட லிமிடெட் எடிஷன் பேண்ட்களை அறிமுகம் செய்த ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனம் புது வாட்ச் பேண்ட்கள் மற்றும் வாட்ச் பேஸ்களை அவ்வப்போது அறிமுகம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது. சமீபத்தில் பிரைட் பேண்ட் மற்றும் பிரைட் வாட்ச் பேஸ்களை ஆப்பிள் அறிமுகம் செய்தது. அந்த வரிசையில் தற்போது 22 புதிய பேண்ட்கள் அடங்கிய தொகுப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாட்டின் கொடியை சார்ந்து உருவாகி இருக்கின்றன.
ஆப்பிள் வாட்ச் 
ஒவ்வொரு பேண்ட்களும் அந்தந்த நாட்டு விளையாட்டு வீவர்களின் போட்டி மனப்பாண்மையை போற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. புது பேண்ட்களுடன் ஸ்டிரைப்கள் அடங்கிய ஆப்பிள் வாட்ச் பேஸ்களும் வழங்கப்படுகின்றன. வாட்ச் பேஸ்களை பயனர்கள் ஆப்பிள் க்ளிப் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
புதிய பேண்ட்கள் International Collection Solo Loop என அழைக்கப்படுகின்றன. இவை 40mm மற்றும் 44mm அளவுகளில் கிடைக்கின்றன. ஆப்பிள் ஸ்டோரில் புது பேண்ட்களின் விலை ரூ. 3900 ஆகும். இவை ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4, ஆப்பிள் வாட்ச் SE மற்றும் அதன்பின் வெளியான மாடல்களுக்கு கிடைக்கின்றன

Google+ Linkedin Youtube