வெப் தொடரில் எஸ்.ஜே.சூர்யா

வெப் தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளதால் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் அதிக தொடர்கள் தயாராகின்றன. வெப் தொடர்களில் நடிப்பவர்களுக்கு அதிக சம்பளமும் கொடுக்கப்படுகிறது. சூர்யா, சத்யராஜ், பிரசன்னா, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், மீனா, தமன்னா, நித்யா மேனன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட முன்னணி நடிகர் நடிகைகள் வெப் தொடர்களில் நடிக்க வந்துள்ளனர். சமந்தா. பிரியாமணி நடித்த பேமிலிமேன் 2 வெப் தொடர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் எஸ்.ஜே.சூர்யாவும் வெப் தொடருக்கு வந்துள்ளார். திகில் கதையம்சத்தில் இந்த தொடர் தயாராக உள்ளது. ஆண்ட்ரூ லூயிஸ் இயக்குகிறார். இதர நடிகர் நடிகைகள் தேர்வு நடக்கிறது. ஓரிரு மாதங்களில் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர். எஸ்.ஜே.சூர்யா வாலி, குஷி உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். நியூ, இசை, அன்பே ஆருயிரே, மான்ஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது மாநாடு, டான், பொம்மை படங்களில் நடித்து வருகிறார்

Google+ Linkedin Youtube