தமிழ் படத்தில் அறிமுகம் கதாநாயகியான ஜீவிதா மகள்

வாரிசுகள் பலர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். கமல்ஹாசன் மகள்கள் சுருதிஹாசன், அக்‌ஷரா ஹாசன், நடிகை மேனகா மகள் கீர்த்தி சுரேஷ், நடிகை லிசி மகள் கல்யாணி, நடிகை ராதாவின் மகள்கள் கார்த்திகா, துளசி, மறைந்த நடிகை ஶ்ரீதேவியின் மகள் ஜான்வி ஆகியோர் கதாநாயகிகளாகி உள்ளனர். இந்த வரிசையில் நட்சத்திர தம்பதிகளான ராஜசேகர், ஜீவிதா மகள் சிவாத்மிகாவும் தமிழ் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். ஜீவிதா 1980-களில் தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஶ்ரீனிதி சாகர் தயாரிக்கும் இந்த படத்தில் கதாநாயகனாக அசோக் செல்வன் நடிக்கிறார். ஆர்.கார்த்திக் இயக்குகிறார். சூர்யாவுடன் சூரரைப் போற்று படத்தில் நடித்து பிரபலமான அபர்ணா பாலமுரளி, ரிதுவர்மா ஆகிய மேலும் 2 கதாநாயகிகளும் இதில் நடிக்க உள்ளனர். காதல் கதையம்சம் உள்ள படமாக தயாராக உள்ளது. படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை

Google+ Linkedin Youtube