'பிளாஸ்டிக்'கின் விதியை மாற்றும் வேதியியல்

ஜெர்மனியிலுள்ள விஞ்ஞானிகள், உலகமே வெறுக்கும் 'பிளாஸ்டிக்'கிற்கு, வேறு வகையில் மறுவாழ்வு தர ஆராய்ந்து வருகின்றனர். அந்த ஆராய்ச்சியின் விளைவாக, தற்போது அவை மனித தேவைகளுக்கு ஏற்றபடி மாறும் தன்மையை பெற்றுள்ளனர்.
பிரான்ஹோபெர் பாலிமர் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள், பிளாஸ்டிக்குடன், என்சைம்களைக் கலக்கும் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளனர். அதிக வெப்பத்தில் உருகிய நிலையில் இருக்கும் பிளாஸ்டிக்குடன் என்சைம்களை கலந்தால் அவை உயிரிழந்துவிடும். எனவே, நுண்துளைகளைக் கொண்ட சில துகள்களில் என்சைம்களை நுழைத்து, பிளாஸ்டிக்குடன் விஞ்ஞானிகள் கலந்தனர்.
ஆனால், வெப்பத்தினால் பாதிக்கப்படாமல், அந்த துகள்களின் துளைகளில் இருந்த என்சைம்கள் தப்பித்தன. அந்த என்சைம்கள் பிற்பாடு இரு வகைகளில் பிளாஸ்டிக்குகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஒன்று பிளாஸ்டிக்கின் மேற்புற புரதங்களை சிதைக்கும்படி செய்யலாம். அல்லது. பிளாஸ்டிக்குகளை விரைவில் மட்கும்படி செய்யலாம்.சோதனைக்கூடத்தைவிட்டு பிளாஸ்டிக்-என்சைம் தொழில்நுட்பம் வந்தால், அதற்கு பெரும் வரவேற்பு காத்திருக்கிறது.

Google+ Linkedin Youtube