போரில் அசத்திய செயற்கை நுண்ணறிவு!

பிரிட்டனின் கடற்படை அண்மையில் ஒரு போர் பயிற்சியை மேற்கொண்டது. 'நேட்டோ' கூட்டமைப்பின் 10 நாடுகளைச் சேர்ந்த 3,300 வீரர்கள், 'உடைக்க முடியாத கவசம்' என்ற அந்த ஒத்திகையில் பங்கேற்றனர். இதுவரை வழக்கமாக நடக்க கூடியது தான். ஆனால் இந்த முறை அசலான ஏவுகணைகளை ஏவும் தாக்குதல் பயிற்சியில், செயற்கை நுண்ணறிவு கொண்ட கணினிகளும் பங்கெடுத்தன.

ஒலியைவிட வேகமாக பயணிக்கும் எதிரி ஏவுகணைகளை துல்லியமாக அடையாளம் கண்டு குறுக்கிட்டு தகர்ப்பதில், செயற்கை நுண்ணறிவு கணினிகள் அபாரமாக செயல்பட்டதாக போர் வியூக அதிகாரிகள் பிற்பாடு தெரிவித்தனர்.

பயிற்சியில் பங்கேற்ற 15 போர் கப்பல்களில் இருந்த கடற்படை அணியினரின் நம்பிக்கையை, செயற்கை நுண்ணறிவு கணினிகள் பெற்றுவிட்டதாகவே, 'ராயல் நேவி'யின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. மனிதர்களை ஒதுக்கிவிடாமல், ஒரு சிறந்த அணி தோழனாக செயற்கை நுண்ணறிவால் பணியாற்ற முடியும் என்பதை இந்த போர் பயிற்சி உணர்த்தியது.

Google+ Linkedin Youtube