குறைய மறுக்கும் காற்று மாசு

போன ஆண்டும் பெருந்தொற்று இருந்தது. இந்த ஆண்டும் அது நீடிக்கிறது. ஆனால் முன்பு ஆலைகள், சாலைகள் என்று சகலமும் பொது முடக்கத்தில் இருந்ததால், காற்று மாசு குறைந்திருந்தது. ஆனால் இந்த ஆண்டு அப்படி இல்லை என்கின்றனர்,
விஞ்ஞானிகள்.அண்மையில், ஹவாய் தீவில் உள்ள மவுனா லோவா வளிமண்டல கண்காணிப்பகத்தில், காற்று மாசு அளவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி காற்று மாசின் அளவுகள் மோசமான உச்சத்தை எட்டியுள்ளதாக விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர். எந்த அளவுக்கு மோசம்? பூமியில் கடந்த 40 லட்சம் ஆண்டுகளாக இல்லாத அளவில் காற்றில் மாசு அதிகமாகியுள்ளது.கடந்த பல மாதங்களாக தொடரும் பொதுமுடக்கம், சில வகை காற்று மாசுகளை குறைத்திருப்பது உண்மை தான்.
அதனால் தான், காற்றின் புகை மண்டலம் விலகி, வெகுதொலைவு வரை தெளிவாக பார்க்க முடிந்தது. ஆனால், சில நுாற்றாண்டுகளாக, தொடர்ந்து காற்றில் கலக்கும் மாசுபாடுகளின் அளவு, ஒரு சில மாதங்கள் முடக்கத்தால் அடியோடு மறையாது என, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.மாசுபாட்டை குறைக்க, பொதுமுடக்கத்தை நம்பியிருப்பதைவிட, மின் வாகனங்கள், சூரிய மின்சாரம், போன்றவற்றை அதிக அளவில் உலக மக்கள் பயன்படுத்துவதே நிரந்தர தீர்வு என்கின்றனர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்

Google+ Linkedin Youtube