பண நெருக்கடியால் 9 வருடம் முடங்கிய நயன்தாரா படம்

நயன்தாரா 2005-ல் ‘ஐயா' படத்தில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்து அதிக சம்பளம் பெறும் தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தையும் பிடித்து 16 வருடங்களாக கொடி கட்டி பறக்கிறார்.
ஆனால் நயன்தாரா நடித்துள்ள ஆரடுகுலா புல்லட் என்ற தெலுங்கு படம் மட்டும் பண நெருக்கடியால் திரைக்கு வராமல் 9 வருடங்களாக முடங்கி இருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகனாக கோபிசந்த் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பை 2012-ல் தொடங்கினர். முழு படப்பிடிப்பையும் முடித்து அந்த வருடமே திரைக்கு கொண்டு வரவும் திட்டமிட்டனர்.
ஆனால் படத்தின் இயக்குனர் பூபதி பாண்டியன் சில பிரச்சினைகளால் படத்தில் இருந்து விலகியதால் தாமதம் ஏற்பட்டது. பின்னர் கோபால் என்பவர் இயக்கினார். படத்தை முடித்து 2017-ல் தணிக்கை குழுவுக்கு அனுப்பி யூஏ சான்றிதழ் பெற்றனர். அதன்பிறகும் பண நெருக்கடி உள்ளிட்ட சில பிரச்சினைகளால் ரிலீஸ் தள்ளிப்போனது. இந்த நிலையில் தற்போது பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு விட்டதால் படத்தை விரைவில் திரைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடக்கின்றன.

Google+ Linkedin Youtube