மஸ்கின் சுரங்க போக்குவரத்து ஆரம்பம்

ஒரு வழியாக, டெஸ்லா அதிபர் எலான் மஸ்கின், கனவு திட்டங்களுள் ஒன்று செயல்பாட்டுக்கு வந்தது, ஐந்து ஆண்டுகளுக்கு முன், போக்குவரத்து நெரிசலை ஒழிக்க, 'தி போரிங் கம்பெனி'யை துவங்குவதாக அறிவித்தார் மஸ்க். அதன் சிறிய பகுதியாக அண்மையில், லாஸ் வேகாஸ் நகருக்கு அடியில், 1.7 மைல் நீளமுள்ள சுரங்க சாலையை அவர் துவங்கியுள்ளார்.
இதில் டெஸ்லாவின் மின்சார கார்கள் மட்டுமே இயங்கும். அதில் கட்டணம் செலுத்தி பயணியர் செல்லலாம். சூதாட்ட நகரமான லாஸ் வேகாசின் முக்கியமான மூன்று நிறுத்தங்களுக்கு மட்டும், மஸ்கின் சுரங்கப்பாதை போக்குவரத்து இயங்கும்.
அடுத்த சில ஆண்டுகளில், லாஸ் வேகாஸ் நகரின் எல்லா பகுதிகளையும் இணைக்கும்படி சுரங்க பாதையை அமைப்பார் மஸ்க். அப்போது, சுரங்க சாலையில் காந்த ரயில் மேடைகள், எந்த காரையும் ஏற்றிக்கொண்டு மணிக்கு, 150 மைல் வேகத்தில் பறக்கும் என மஸ்க் அறிவித்துள்ளார்.

Google+ Linkedin Youtube