தாராபுரம்: பாஜக மாநில தலைவர் எல்.முருகனுக்கு வைக்கப்பட்ட பேனர் கிழிப்பு..!

தாராபுரம்: பாஜக மாநில தலைவர் எல்.முருகனுக்கு வைக்கப்பட்ட பேனர் கிழிப்பு..!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் எல்.முருகனுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து அக்கட்சி சார்பில் வைக்கப்பட்ட பேனரை அடையாளம் தெரியாத நபர்கள் கிழித்துள்ளனர்.

தாராபுரம் தனி சட்டமன்றத் தொகுதியில் எல்.முருகன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கயல்விழியைவிட ஆயிரத்து 393 வாக்குகள் குறைவாகப் பெற்று தோல்வியடைந்தார்.

இந்நிலையில் எல்.முருகனுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து அண்ணா சிலை அருகே பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதன் அருகே திமுகவினரும் நன்றி அறிவிப்பு பேனர் வைத்திருந்தனர். இந்நிலையில் முருகனுக்காக வைக்கப்பட்ட பேனரை அடையாளம் தெரியாத நபர்கள் கிழித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவியதால் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

Google+ Linkedin Youtube