’அசுரன்’ பட நடிகை அம்மு அபிராமிக்கு கொரோனா தொற்று உறுதி

’அசுரன்’ பட நடிகை அம்மு அபிராமிக்கு கொரோனா தொற்று உறுதி

’அசுரன்’ பட நடிகை அம்மு அபிராமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

விஜய்யின் ‘பைரவா’, கார்த்தியின் ‘தீரன் அதிகாரம் ஒன்று’, விஷ்ணு விஷாலின் ‘ராட்சசன்’, தனுஷின் ‘அசுரன்’ என பலப் படங்கள் மூலம் கவனம் ஈர்த்த அம்மு அபிராமி தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதில், “எனக்கு தொடர்ச்சியான காய்ச்சல் இருந்ததால் பரிசோதித்து பார்த்தேன். கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. உடனேயே, மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்திகொண்டேன். உறுதியுடன் கொரோனாவிலிருந்து மீண்டு வருவேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

Google+ Linkedin Youtube