சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 3 பேருக்கு கொரோனா!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 3 பேருக்கு கொரோனா!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சார்ந்த மூவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. பிரபல விளையாட்டு ஊடக நிறுவனம் தெரிவித்துள்ள செய்தியின் படி பார்த்தால் நிர்வாகிகள் இருவர் உட்பட மொத்தம் மூவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், பந்து வீச்சு பயிற்சியாளர் பாலாஜி மற்றும் வீரர்கள் செல்லும் பேருந்தை பராமரித்து வரும் கிளீனர் உட்பட மூவருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. 

அதே போல கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான இன்றைய லீக் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா அணியின் வீரர்கள் வருண் சக்கரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் என இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில் இந்த இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Google+ Linkedin Youtube