“தேர்தல் வியூக நிபுணர் பணியை கைவிடுகிறேன்”- பிரஷாந்த் கிஷோர்

“தேர்தல் வியூக நிபுணர் பணியை கைவிடுகிறேன்”- பிரஷாந்த் கிஷோர்

பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரஷாந்த் கிஷோர் தமது பணியை கைவிட்டுவிட்டதாக கூறியுள்ளார்.

தமிழகத்தில் திமுகவுக்கும் மேற்கு வங்காளத்தில் திரிணாமூல் காங்கிரசுக்கும் வெற்றிகரமாக தேர்தல் வியூகங்களை வகுத்தளித்துள்ள நிலையில் அவரது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில் ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், தேர்தல் ஆணையம் பாரதிய ஜனதாவின் ஒரு அங்கமாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டினார். தேர்தல்களில் பாரதிய ஜனதா வெல்வதற்கு தேர்தல் ஆணையம் எல்லா வழிகளிலும் உதவியதாகவும் பிரஷாந்த் கிஷோர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி வெற்றிபெற்று விட்டாலும் அது எளிதாக கிடைத்துவிடவில்லை என்றும் பாரதிய ஜனதா கடும் போட்டி தந்ததாகவும் பிரஷாந்த் கிஷோர் கூறினார். மேற்கு வங்கத்தில் பாரதிய ஜனதா இரட்டை இலக்கத் தொகுதிகளுக்கு மேல் ஜெயிக்காது என கடந்த டிசம்பர் மாதம் கூறியது உண்மையாகிவிட்டதாகவும் பிரஷாந்த் கிஷோர் கூறியுள்ளார்.

Google+ Linkedin Youtube