"மீண்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் ஆட்சி!" - திமுக தலைவருக்கு சித்தார்த் வாழ்த்து

"மீண்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் ஆட்சி!" - திமுக தலைவருக்கு சித்தார்த் வாழ்த்து

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், திமுக தலைவர் திமுக ஸ்டாலினுககு நடிகர்கள் சித்தார்த், விஷால்,விஷ்ணு விஷால் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.

நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் ”ஜெயலலிதா அம்மாவிற்குப் பிறகு மீண்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் ஆட்சி. மு.க ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துகள். எங்கள் அனைவரின் நலனுக்காக நீங்கள் சிறந்த ஆட்சியை கொண்டு வருவீர்கள் என்று நம்புகிறேன். உங்களை மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் பார்க்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல, நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், ”நண்பர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷுக்கு வாழ்த்துகள். எங்கள் முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். அடுத்த சில ஆண்டுகளில் தமிழ்நாடு வளரட்டும். நமது உடைந்த திரைப்படத்துறைக்கு தேவைப்படும் ஆக்சிஜனை எதிர்பார்க்கலாம்” என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல, நடிகர் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், ”மனமார்ந்த வாழ்த்துகள் மு.க ஸ்டாலின் மாமா. உங்கள் திறமையான தலைமையின் கீழ் தமிழகம் செழித்து சரியான திசையில் முன்னேறும் என்று நான் நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Google+ Linkedin Youtube