கொரோனாவுக்கு எதிராக போராடும் குடும்பத்தினர்... ஐபிஎல் போட்டியில் இருந்து விலகிய அஸ்வின்

கொரோனாவுக்கு எதிராக போராடும் குடும்பத்தினர்... ஐபிஎல் போட்டியில் இருந்து விலகிய அஸ்வின்

ஐபிஎல் 2021 தொடரிலிருந்து பாதியிலேயே விலகுவதாக அஸ்வின் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் 2ம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் தன் குடும்பத்துடன் இருப்பதுதான் சரி என்று முடிவெடுத்துள்ளதாக கூறியுள்ளார். சன் ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு எதிராக சூப்பர் ஓவர் வெற்றிக்குப் பிறகு அஸ்வின் தன் ட்விட்டர் பக்கத்தில் இதனைப் பதிவிட்டுள்ளார்.

2021 ஐபிஎல் தொடரிலிருந்து நாளை முதல் நான் விடைபெற்றுக் கொள்கிறேன். கொரோனா வைரசுக்கு எதிராக என்னுடைய குடும்பத்தார் போராடி வரும் நிலையில் இந்த நேரத்தில் அவர்களுக்காக இந்த கடினமான நேரத்தில் உடன் இருப்பது அவசியம் என்று கூறியுள்ளார்.

அனைத்தும் சரியான திசையில் சென்றால் நான் மீண்டும் அணியில் சேர்வேன் என எதிர்பார்க்கிறேன் . நன்றி டெல்லி கேபிடல்ஸ் எனத் தெரிவித்துள்ளார். டெல்லி கேப்பிடல்ஸ் அணி மும்பையில் தொடங்கி சென்னை போட்டிகளை நேற்றுடன் முடித்துள்ளனர். திங்களனான இன்று அகமதாபாத் செல்கிறது டெல்லி அணி. இந்தியாவில் தினசரியும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சராசரியாக 3 லட்சத்தைக் கடந்து வருகிறது, என்னதான் பாதுகாப்புச் சூழலில் வீரர்கள் இருந்தாலும் பயமும் கவலையும் கூடவே பதற்றமும் தொற்றிக்கொண்டுள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கும், 'இந்த ஐபிஎல் தொடர் உள்ளே என்ன நடக்கிறது என்பதை விட வெளியே உள்ள நிலவரத்தைப் பற்றிய கவலை அதிகமான ஒரு தொடராக உள்ளது என்று கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரிலிருந்து பாதியிலேயே விலகும் 4-வது வீரர் அஸ்வின். ஏற்கெனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து காயம் காரணமாக பென் ஸ்டோக்ஸ் விலகினார், பயோ-பபுள் சூழலை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து வீரர் லிவிங்ஸ்டோன் விலகினார், ஆஸ்திரேலிய வீரர் ஆன்ட்ரூ டையும் விலகியுள்ளார். மேலும் 2 ஆஸ்திரேலிய வீரர்களுக்கும் ஊருக்குத் திரும்ப கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

Google+ Linkedin Youtube