முதல்கட்ட சோதனையாக மலைகள், குன்றுகள்,பாறைகளை தெளிவாக படம்பிடித்த பெர்சவரன்ஸ் ரோவர்.

          நாசா அமைப்பின் ஜெ.பி.எல் என்ற ஆய்வகத்தால் பெர்சவரன்ஸ் ரோவர் வடிவமைக்கப்பட்டது. இது கடந்த ஆண்டு ஜூலை மாதம் 30-ல் புளோரிடாவில் உள்ள கேப் கெனவரல் விமானப்படைத் தளத்தில் இருந்து அட்லஸ் ராக்கெட் மூலம் இந்த செலுத்தப்பட்டது.

நாசா அமைப்பு தகவல்

          அண்மையில் செவ்வாய் கிரகத்திற்கு வெற்றிகரமாக சென்ற பெர்சவரன்ஸ் ரோவர் தனது பயணத்தின் முதல்கட்ட சோதனை ஓட்டத்தை நிறைவு செய்துள்ளதாக நாசா அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.


பெர்சவரன்ஸ் ரோவர்
           பூமியைத் தவிர உயிரினங்கள் வாழ்வதற்கு ஏதுவான அம்சங்கள் உள்ள கிரகங்களை விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாகத் தேடிக்கொண்டு இருக்கின்றனர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. செவ்வாய் கிரகம் இந்த ஆராய்ச்சியின் முக்கிய கிரகமாக இருந்து வருகிறது. இதற்காக கடந்த ஆண்டு அனுப்பப்பட்ட பெர்சவரன்ஸ் ரோவர் கடந்த மாதம் வெற்றிகரமாக செவ்வாயில் தரையிறங்கியது.மேலும் செவ்வாய் கிரகத்தின் தரைப்பகுதியில் ஆய்வு செய்து வரும் அந்த ரோவர், அங்கு காணப்படும் மலைகள், குன்றுகள், பாறைகள் என அனைத்தையும் மிகவும் தெளிவாக படம்பிடித்து காட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

          நாசா அமைப்பு அண்மையில் வெளியிட்ட தகவலின்படி, கடந்த வெள்ளிக்கிழமை மற்றம் சனிக்கிழமைகளில் பெர்சவரன்ஸ் ரோவரை அதிகமாக இயக்கி முயற்சி மேற்கொண்டதாகவும். இதனால் ரோவர் 33 நிமிடங்கள் முன்னும் பின்னுமாக இயக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

          அதேபோல் நாசா அமைப்பு ஏற்கனவே அனுப்பிய கியூரியாசிட்டி ரோவரை விட 5 மடங்கு வேகத்தில் பெர்சவரன்ஸ் ரோவர் இயங்குவதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பின்பு செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் மேலும் ஆய்வு செய்வதற்கான பாதைகள் குறித்து பரிசீலித்து வருவதாக விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ரோவர் உடன் அனுப்பி குறிப்பாக பெர்சவரன்ஸ் ரோவர் உடன் அனுப்பி வைக்கப்பட்ட சிறிய ரக ஹெலிகாப்டரை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், பின்பு 30 இடங்களில் பாறைகள் மற்றும் மாதிரிகளை சேகரிக்க முயற்சி செய்து வருவதாகவும் நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

          மேலும் இந்த மாதிரிகளை மற்றொரு ரோவர் மூலம் வரும் 2031-ம் ஆண்டு பூமிக்கு கொண்டு வர நாசா திட்டமிட்டுள்ளது. குறிப்பாக ஓராண்டுக்கு ரோவர் செவ்வாய்கிரகத்தில் ஆய்வு மேற்கொள்கிறது. குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் செவ்வாய் கிரகத்தில் ஓர் ஆண்டு என்பது பூமியை பொறுத்தவரை 687 நாட்கள். கார்பன் டை ஆக்சைடை ஆக்சிஜனாக கார்பன் டை ஆக்சைடை ஆக்சிஜனாக மாற்றும் கருவியும் ரோவருடன் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதன் வெற்றியை பொறுத்துதான் மனிதர்களை செவ்வாய்க்கு அனுப்பும் திட்டத்தை நாசா வகுக்கும் என்று கூறப்படுகிறது.

Google+ Linkedin Youtube