குமரி மாவட்டத்தில் கொரோனா  தடுப்பூசி போடும் பணியை அரவிந்த் IAS அவர்கள் துவக்கி வைத்தார்

குமரி மாவட்டத்தில் கொரோனா  தடுப்பூசி போடும் பணியை மாவட்ட ஆட்சியர் மரியாதைக்குரிய அரவிந்த் IAS அவர்கள் தொடங்கி வைத்தார்.
தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்திருந்தாலும், கொரோனாவிற்கு எதிரான நமது போர் தொடர்கிறது. 2 டோஸ் தடுப்பூசி போடுவது கட்டாயம். ஒரு மாத கால இடைவெளியில் இரண்டு டோஸ்களை செலுத்தி கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பூசி தொடர்பான வதந்திகளை மக்கள் நம்பக்கூடாது. மற்ற நாடுகளை காட்டிலும் இந்திய தடுப்பூசி விலை குறைவு.முதல் டோஸ் போட்டவுடன், மாஸ்க்குகளை கைவிடக்கூடாது. சமூக இடைவெளியை கடைபிடிப்பதை தொடர வேண்டும். இரண்டாவது டோஸ் போட்ட உடன் தான் எதிர்ப்பாற்றல் நமது உடலில் உருவாகும்.கொரோனாவுக்கு எதிரான போரில், நமது வெற்றியை தடுப்பூசி உறுதிப்படுத்தும். மற்ற தடுப்பூசிகளை காட்டிலும், இந்திய தடுப்பூசிகளை பாதுகாப்பது எளிது.

Google+ Linkedin Youtube