சூப்பர் ஹீரோ கதையில் விஜய்

மாஸ்டர் படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 65-வது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவதாக இருந்தது. ஆனால் சம்பள பிரச்சினையால் அந்த படத்தில் இருந்து முருகதாஸ் விலகி விட்டார். எனவே அவருக்கு பதிலாக விஜய் படத்தை நெல்சன் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே விஜய்யின் புதிய படத்தை இயக்குவதாக பார்த்திபன், எஸ்.ஜே.சூர்யா, பாண்டிராஜ், அருண்ராஜா காமராஜ், அஜய் ஞானமுத்து ஆகியோரின் பெயர்கள் அடிபட்டன. இந்த நிலையில் அடுத்து விஜய் சூப்பர் ஹீரோ கதையொன்றில் நடிக்க திட்டமிட்டு உள்ளதாகவும், அந்த படத்தை பா.ரஞ்சித் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனை ரஞ்சித்தும் உறுதிப்படுத்தி உள்ளார். அவர் கூறும்போது, “காலா படத்தை முடித்ததுமே விஜய்யை நேரில் சந்தித்து கதை சொன்னேன். அது சூப்பர் ஹீரோ கதை. விஜய்க்கும் அந்த கதை பிடித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார். எனவே 65-வது படத்தை முடித்து விட்டு ரஞ்சித்தின் சூப்பர் ஹீரோ கதையில் விஜய் நடிப்பாரா என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. ஹாலிவுட்டில் சூப்பர் ஹீரோ படங்கள் அதிகம் வருகின்றன. அவற்றுக்கு பெரிய ரசிகர்கள் வட்டாரமும் உள்ளது.

Google+ Linkedin Youtube