நிவர் புயல் அதிதீவிர புயலாக மாறியது; மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் நகர்கிறது

வங்கக்கடலில் தீவிர புயலாக உள்ள நிவர் புயல் இன்று பிற்பகலில் அதி தீவிர புயலாக வலுப்பெறும் என்றும், காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் இன்றி நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என்றும், புயலின் தாக்கம் இன்றிரவு முதல் அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்து வரும் 2 தினங்களுக்குப் பரவலாக மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக பெய்த கனமழை காரணமாக பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நிவர் புயல் சென்னைக்கு தென் கிழக்கே 250 கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ளது நிவர் புயல் அதிதீவிர புயலாக மாறியது; மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் நிவர் புயல் நகர்ந்து வருகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

நிவர் புயலால் பாதிப்பு ஏற்பட்டால், உதவி செய்வதற்கு தயாராக உள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. மீட்பு பணியில் ஈடுபடுவதற்கு 12 பேரிடர் மீட்பு குழுக்கள், 2 பொறியாளர் குழுக்கள் தயாராக உள்ளதாக இந்திய ராணுவம் சார்பில் நேற்று தெரிவிக்கப்பட்டது. மேலும் புயல் பாதிப்பின் போது தொலை தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட வாய்ப்பிருப்பதால், தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரி நிலவரங்கள் குறித்து மாநில, மாவட்ட கட்டுப்பாட்டு அறைகளில் உள்ள அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு கேட்டறிந்து வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், மீட்பு பணிக்காக 14 இந்திய ராணுவ குழுக்கள் தற்போது சென்னை மற்றும் திருச்சி மாவட்டத்திற்கு வந்துள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சென்னையில் பேட்டியளித்தார். ஒவ்வொரு குழுவிலும் 10 ராணுவ வீரர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மீட்பு பணிகளுக்காக 8 ஹெலிகாப்டர் தயார் நிலையில் உள்ளது. நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு கடலோர காவல்படை, கப்பல் படை, ராணுவம் மீட்பு பணியில் ஈடுபட தயாராக உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

Google+ Linkedin Youtube