கரோனா: கேரளாவில் வரலாறு காணாத பாதிப்பு; 9,250 பேருக்குத் தொற்று- அமைச்சர் ஷைலஜா

கேரளத்தில் இன்று 9,250 பேருக்குப் புதிதாகக் கரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 8,048 பேர் கரோனா தொற்று நீங்கி வீடு திரும்பியுள்ளனர் என்று அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.ஷைலஜா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது.

''கேரளத்தில் இன்று 9,250 பேருக்குப் புதிதாகக் கரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 8,048 பேர் கரோனாவிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று கரோனாவினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆகும். இதன் மூலம் மொத்தமாக 955 மரணங்கள் ஏற்பட்டுள்ளன.

இன்று மாவட்ட வாரியாக கரோனா பாதிக்கப்பட்டவர்களின் விவரம்:
கோழிகோடு 1,205, மலப்புரம் 1,174, திருவனந்தபுரம் 1,012, எர்ணாகுளம் 911, ஆலப்புழா 793, திருச்சூர் 755, கொல்லம் 714, பாலக்காடு 672, கண்ணூர் 556, கோட்டயம் 522, காசர்கோடு 366, பத்தனம் திட்டா 290, இடுக்கி 153, வயநாடு 127. நோய் கண்டறியப்பட்டவர்களில் 24 பேர் வெளிநாடுகளிலிருந்தும், 143 பேர் பிற மாநிலங்களிலிருந்தும் திரும்பி வந்துள்ளனர்.

8,215 பேருக்கான நோய்த் தொற்று உள்ளூர்த் தொடர்புகள் மூலம் ஏற்பட்டதாகும். 757 பேரின் நோய்த்தொற்றுக்கான தொடர்பு ஆதாரம் தெரியவில்லை. மாவட்டங்களிலிருந்து தொடர்பு கொள்வதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மாவட்ட வாரியாக கோழிக்கோடு 1,171, மலப்புரம் 1,125, திருவனந்தபுரம் 878, எர்ணாகுளம் 753, ஆலப்புழா 778, திருச்சூர் 723, கொல்லம் 704, பாலக்காடு 400, கண்ணூர் 376, கோட்டயம் 499, இடுக்கி 111, வயநாடு 115. கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 111 சுகாதாரப் பணியாளர்களும் அடங்குவர்.

இன்று பரிசோதிக்கப்பட்டதில் நோய்த் தொற்றிலிருந்து குணமான நோயாளிகளின் மாவட்ட வாரியான எண்ணிக்கை:
திருவனந்தபுரம் 1,074, கொல்லம் 1,384, பத்தனம்திட்டா 222, ஆலப்புழா 348, கோட்டயம் 452, இடுக்கி 98, எர்ணாகுளம் 458, திருச்சூர் 860, பாலக்காடு 315, மலப்புரம் 825 மற்றும் காசர்கோடு 449.

இதுவரை, மாநிலத்தில் 1,75,304 பேர் கரோனாவிலிருந்து குணமாகியுள்ளனர், தற்போது 91,756 நோயாளிகள் அதற்கான சிகிச்சையில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 68,321 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன. சென்டினல் கண்காணிப்பின் ஒரு பகுதியாக முன்னுரிமைக் குழுக்களிடமிருந்து 2,12,185 மாதிரிகள் உட்பட மொத்தம் 34,71,365 மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இன்று 11 புதிய இடங்கள் ஹாட்ஸ்பாட்களாக அறிவிக்கப்பட்டன''.

இவ்வாறு அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார்.

Google+ Linkedin Youtube