பிஹார்,உத்தர பிரதேசத்தில் வருமான வரித்துறை சோதனை

பிஹார் மற்றும் உத்தர பிரதேசத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.

கடந்த அக்டோபர் 6-ம் தேதி உளவுப் பிரிவில் இருந்து கிடைத்த தகவலை அடுத்து பாட்னா, சாசரம் மற்றும் வாரணாசியில் சுரங்கத் தொழில் மற்றும் உணவு விடுதி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள ஒரு நபரின் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கூட்டுறவு வங்கி ஒன்றின் தலைவர் இருப்பிடத்திலும் சோதனை நடைபெற்றது.

சோதனையின் போது அந்த நபரின் காரிலிருந்து 75 லட்ச ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து நடைபெற்ற விசாரணையில் அது ஒரு கூட்டுறவு வங்கி தலைவரின் கணக்கில் காட்டப்படாத பணம் என்று தெரியவந்தது.

கணக்கு காட்டப்படாத 1.25 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம், ரூபாய் 6 கோடி மதிப்பிலான நிரந்தர வைப்பு நிதி முதலியவை கண்டறியப்பட்டுள்ளன.

Google+ Linkedin Youtube