தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அக்டோபர் 1-ம் தேதி அமல்

தமிழகத்தில் 2021 சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களிலே உள்ளதால், அதற்கான வேலைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையில் திமுக தலைவர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், “6 மாதத்தில் விடியல் பிறக்கும்” என்று பதிவிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் காமராஜ், “ஆறு மாதத்தில் விடியல் பிறக்கும் என ஸ்டாலின் கூறியது எல்லாம் பகல் கனவு தான்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ளது என்று தெரிவித்தார். மேலும் விவசாயிகளுக்கு தீமை விளைவிக்கும் எந்த சட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது என்று கூறிய அவர், வேளாண் மசோதா தாக்கல் செய்யப்பட்டதன் மூலம் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது என்று தெரிவித்தார்.

Google+ Linkedin Youtube