சிங்கப்பூரில் கரோனா பரவல் குறைந்தது

சிங்கப்பூரில் புதிதாக 49 பேருக்கு கரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உறுதிப்படுத்தப்பட்டவர்களில் பெரும்பாலனவர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்.

இதுகுறித்து சிங்கப்பூர் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “ சிங்கப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் 49 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதில் 8 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். பெரும்பாலனவர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் படிப்படியாக கரோனா வைரஸ் கட்டுக்குள் வந்துள்ளதாக ஊடகங்கள்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியாவில் இருந்து வரும் சிங்கப்பூர் குடிமக்கள் அல்லாதவர்கள் கடந்த 72 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் கரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும் போன்ற தீவிர நடவடிக்கைகளை சிங்கப்பூர் அரசு எடுத்து வருகிறது.

கரோனா வைரஸ் பரிசோதனையை முறையாகச் செய்யாத இந்தியர்கள் உள்பட 13 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்யத் தடை விதித்து சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது.

ஒவ்வொரு 14 நாட்களுக்கு ஒருமுறையும் கண்டிப்பாக வெளிநாட்டினர் கரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அவ்வாறு தவறும்பட்சத்தில் அவர்கள் நிறுவனங்களில் தொடர்ந்து பணியாற்றத் தடை விதிக்கப்படும் என்ற விதிமுறை இருக்கிறது. இதன்படி தடை விதித்து சிங்கப்பூர் அரசு முன்னரே உத்தரவிட்டிருந்தது.

Google+ Linkedin Youtube