உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.77 கோடியாக உயர்வு

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ்  உலக நாடுகளை உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றை  முழுமையாக கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. ஏறத்தாழ 9 மாதங்கள் ஆகியுள்ள நிலையிலும் தொற்று பரவல் சில நாடுகளில் இன்னும் வேகமாகவே உள்ளது.

இன்று காலை நிலவரப்படி உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 கோடியே 77 லட்சத்து  21 ஆயிரத்து 443 ஆக உள்ளது. தொற்று பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 லட்சத்து 858- ஆக உள்ளது. ஆறுதல் அளிக்கும் விஷயமாக தொற்றில் இருந்து  சுமார் 1 கோடியே 98 லட்சம் பேர்  தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு விவரங்களை வெளியிட்டு வரும் வேர்ல்டோமீட்டர்ஸ் இணையதள தரவுகளின் படி,  அமெரிக்காவில் புதிதாக 28,104 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 65 லட்சத்து 13 ஆயிரத்து 684-ஆக உள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 94 ஆயிரமாக உள்ளது.

பிரேசிலில் 41 லட்சத்து 65 ஆயிரத்து 124 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில்  தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 27 ஆயிரமாக உள்ளது.

Google+ Linkedin Youtube