டிக் டாக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திடீர் ராஜினாமா

டிக்டாக் செயலியின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து கெவின் மேயர், ராஜினாமா செய்துள்ளதாக அதன் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் தெரிவித்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலாம விளங்கி வந்த டிக் டாக் செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. அதேபோல், டிக் டாக் நிறுவனத்திற்கு எதிராக தடைகளை கொண்டு வர அமெரிக்காவும் திட்டமிட்டு வருகிறது.  இதனால்,  சர்வதேச அளவில் கடும் நெருக்கடிகளை டிக் டாக் நிறுவனம் எதிர்கொண்டுள்ளது.

இந்த சூழலில், டிக்டாக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கெவின் மேயர் தனது பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக டிக் டாக் ஊழியர்களுக்கு அவர்  அனுப்பிய கடிதத்தில்,  'கனத்த இதயத்துடன் நிறுவனத்தை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளேன் என்பதை உங்கள் அனைவருக்கும் தெரியப்படுத்த விரும்புகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

டிக் டாக் பொது மேலாளர் வனேசா பப்பாஸ், கெவின் மேயருக்கு பதிலாக இடைக்கால சிஇஒ-வாக  செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Google+ Linkedin Youtube