தியேட்டர்களை எப்போது திறக்கலாம் என மத்திய அரசு செப்.1ஆம் தேதி ஆலோசனை

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 25 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.. கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் தியேட்டர்களும் மூடப்பட்டன. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. எனினும் தியேட்டர்கள் திறப்பது குறித்து மத்திய அரசு இதுவரை அனுமதி வழங்கவில்லை.  

இந்த நிலையில், திரையரங்குகளை திறக்க அனுமதிப்பது குறித்து வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி மத்திய அரசு ஆலோசனை நடத்த இருப்பதாக செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கையில் கடம்பூர் ராஜூ மேலும் கூறுகையில்,  தியேட்டர்களை எப்போது திறக்கலாம் என்பது குறித்து மத்திய அரசு செப்டம்பர் 1 ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ளது. மத்திய அரசு என்ன வழிகாட்டுதல் சொல்கிறதோ அதன்படி தமிழகத்தில் தியேட்டர்கள் திறக்கப்படும்” என்றார்.

Google+ Linkedin Youtube