கைலாசா நாட்டில் ஓட்டல் திறக்க அனுமதி வேண்டும் நித்யானந்தாவுக்கு ஓட்டல் அதிபர் கடிதம்

கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி வசித்து வரும் நித்யானந்தாவிடம், அங்கு ஓட்டல் திறப்பதற்கு அனுமதி கேட்டு தமிழர் ஒருவர் அனுப்பியுள்ள கடிதம் சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

தமிழகத்தின் திருவண்ணாமலையைச் சேர்ந்த நித்யானந்தா மீது ஆட்கடத்தல், கொலை வழக்கு, பாலியல் புகார் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறார். பல சர்ச்சைகளில் சிக்கியுள்ள இவர், அதில் இருந்து தப்பிப்பதற்காக இந்தியாவை விட்டு வெளியேறி கைலாசா என்ற நாட்டை உருவாக்கி வருகிறார்.

அது குறித்து அவ்வப்போது தன்னுடைய யூ டியூப் பக்கத்தில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இன்று கூட விநாயகர் சதுர்த்தி என்பதால், கைலாசா நாட்டின் கைலாசாவின் 5 வகையான தங்க நாணயங்களை வெளியிட்டார்.

தமிழில் பொற்காசுகள், ஆங்கிலத்தில் கைலாஷியன் டலஅர், சமஸ்கிருதத்தில் ஸ்வர்ண முத்ரா, புஷ்ப முத்ரா எனவும் அதற்கு பெயர் வைத்தார்.இந்து மதத்தை பின்பற்றும் 56 இந்து நாடுகளுடன் வர்த்தகம் செய்வோம் என அறிவித்துள்ளார். இந்த பொற்காசு 11.6638038 கிராம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது தமிழகத்தின் மதுரையை சேர்ந்த ஓட்டல் நிறுவனர் குமார் என்பவர் நித்யானந்தாவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், கைலாசா நாட்டில் ஓட்டல் துவங்குவதற்கு அனுமதி கோரியுள்ளார். உங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Google+ Linkedin Youtube