சென்னையில் லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று மேலும் 5,881 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 2,45,859 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 97 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 3,935 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து 5,778 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,83,956 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 57,968 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று 60,276 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 26 லட்சத்து 58 ஆயிரத்து 138 ஆக உள்ளது.

சென்னையில் இன்று மட்டும் 1,013 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது 99,794 ஆக உள்ளது.

Google+ Linkedin Youtube