பல்கலைக்கழக இறுதியாண்டு, செமஸ்டர் தேர்வு ரத்து செய்யும் திட்டமில்லை

பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகள் கட்டாயம் என்பதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 31 மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யக் கோரி மாணவர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், பல்கலைக்கழக மானியக் குழு தனது பதிலை பிரமாணப்பத்திரமாக இன்று தாக்கல் செய்தது. அதில்


செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்தால் மாணவர்களின் எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று யுஜிசி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் பல்கலைக்கழக இறுதியாண்டு, செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யும் திட்டமில்லை எனவும் இறுதி செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்தால் சரிசெய்ய முடியாத பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google+ Linkedin Youtube