தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்குள் நாள் புதிய உச்சத்தை தொட்டே வருகிறது. முதலில் சென்னையில் மட்டும் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது.  இதையடுத்து தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோன பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டே உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் இன்று கொரோனா பாதிப்பு உறுதியான மாவட்டங்கள் பின்வருமாறு:-

* மதுரை மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி மேலும் 310 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 10,702 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 7,882 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை 222 பேர் உயிரிழந்துள்ளனர்.

* விழுப்புரம் மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி மேலும் 87  பேருக்கு கொரோனா தொற்று செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,449 ஆக உயர்ந்துள்ளது.

* திருவாரூர் மாவட்டத்தில் இன்று மேலும் 116 பேருக்கு கொரோனா தொற்று செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,166 ஆக உயர்ந்துள்ளது.

* வேலூர் மாவட்டத்தில் இன்று மேலும் 126 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 5,534 ஆக உயர்ந்துள்ளது.

Google+ Linkedin Youtube