அற்புதமான கலைஞர் விஜய் சேதுபதி: நடன இயக்குநர் பிருந்தா

அற்புதமான கலைஞர் விஜய் சேதுபதி என்று 'நானும் ரவுடிதான்' படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்து பிருந்தா தெரிவித்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தலால் எந்தவொரு படத்தின் படப்பிடிப்புமே நடைபெறவில்லை. நடிகர்கள் அனைவருமே வீட்டில் குடும்பத்தினர் பொழுதைக் கழித்து வருகிறார்கள். தங்களுடைய சமூக வலைதளம் மூலம் கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

இதனிடையே சில பிரபலங்கள் தங்களுடைய பழைய நினைவுகளைப் புகைப்படங்களுடன் சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். அந்த வரிசையில் நடன இயக்குநர் பிருந்தா, தான் பணிபுரிந்த படங்களின் நினைவுகள் குறித்து தொடர்ச்சியாக புகைப்படங்களுடன் வெளியிட்டு வருகிறார்கள்.

தற்போது 'நானும் ரவுடிதான்' படத்தின் பாடல்களில் பணிபுரிந்தது தொடர்பாக பிருந்தா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"பணிவு மிகுந்த விஜய் சேதுபதியுடன் பணியாற்றிய 'நானும் ரவுடிதான்' அனுபவம். அவர் இயற்கையாகவே திறமை வாய்ந்த நடிகர், அற்புதமான கலைஞர். நயன்தாராவின் நடிப்பு அட்டகாசமாக இருந்தது. இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு நன்றி. அனிருத்தின் அழகான பாடல். நினைவில் நீடித்திருக்கும் பணி அனுபவம்"

இவ்வாறு பிருந்தா தெரிவித்துள்ளார்.

    “Naanum Rowdy Dhaan” working experience with the very humble Vijay sethupathi. He’s a naturally gifted actor, an excellent performer. Stunning performance by Nayanthara. Thanks to Director Vignesh Shivan. Beautiful song by Anirudh. A memorable working experience. pic.twitter.com/6PGVf3v1eZ

Google+ Linkedin Youtube