பாகிஸ்தான் ராணுவத்தின் தளபதிகளும் அதிகாரிகளும் கொடூரமானவர்கள்: முத்தஹிதா குவாமி இயக்க நிறுவனர் பேட்டி

பாகிஸ்தானின் சிந்த், பலூசிஸ்தான் மக்கள் பாகிஸ்தானின் ஆதிக்கத்தை எதிர்க்கிறார்கள் என்று முத்தஹிதா குவாமி இயக்க நிறுவனர் அல்டாஃப் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

“சிந்து, பலூசிஸ்தானின் உண்மையான மகன்கள் பாகிஸ்தான் கூட்டமைப்பை எதிர்க்கின்றனர். ஏனெனில் பாகிஸ்தான் சிந்த், பலூசிஸ்தான், பக்துன்க்வா பகுதியை காலனியாதிக்கம் செய்துள்ளது. இப்பகுதியின் வளங்கள் அனைத்தையும் சுரண்டி விட்டது பாகிஸ்தான் கூட்டமைப்பு.

பஞ்சாப் மாகாணத்தின் நலன்களுக்காக சிந்து, பலூசிஸ்தான், பக்துன்க்வா, கில்ஜித் பால்திஸ்தான் ஆகியவற்றை சுரண்டுகின்றனர், இந்த மக்கள் இதனை அனுமதிக்கக் கூடாது. பஞ்சாபின் ஆதிக்கத்திலிருந்து விடுபட வேண்டும்.

சிந்து தேசத்தில் அனைவருக்கும் சமஉரிமை நிலைநாட்டப்படும். இனம், மொழி, சாதி, மத ரீதியாக பாகுபாடு பார்க்கப்பட மாட்டாது.

பிரிட்டிஷ் காலனியாதிக்கச் சக்திகளின் பிரிவினை வாத அரசியலுக்கு மதத்தைப் பயன்படுத்தினர், இதனால் உருவானதுதான் பாகிஸ்தான்.

மேற்கு பஞ்சாப் மக்கள் பிரிட்டீஷ் ஆதிக்க சக்திகளுக்கு துணைபோயினர். சுதந்திரப் போராட்ட வீரர்களை நசுக்க உதவினர்.

பிரிட்டிஷ் ராணுவத்தில் பெரும்பகுதியினர் மேற்கு பஞ்சாபியர்களே. இவர்கள் பிரிட்டீஷாரால் பயிற்சி அளிக்கப்பட்டு முஸ்லிம்களுக்கு எதிராக இவர்கள் பிரிட்டிஷ் ராணுவத்துக்குச் சேவை ஆற்ற தயாராக இருந்தனர்.

பாகிஸ்தான் ராணுவத்தின் தளபதிகளும் அதிகாரிகளும் கொடூரமானவர்கள். ஏனெனில் இவர்களின் மூதாதையர்கள் பிரிட்டீஷாரால் பயிற்சி அளிக்கப்பட்டவர்கள். இந்தியா, சவுதி அரேபியா, ஜோர்டான், ஏமன் ஆகியவற்றில் அப்பாவி முஸ்லிம்களை இவர்கள் கொன்று குவித்தனர்” என்ரு அல்டாஃப் ஹுசைன் துணைகண்ட வரலாறு பற்றிய தன் சொற்பொழிவில் கூறியுள்ளார்.

Google+ Linkedin Youtube