பூமியின் காந்தப்புலம் பலவீனமடைந்து வருகிறது! இதனால் யாருக்கு பாதிப்பு தெரியுமா

பூமியின் காந்தப்புலம் சூரிய கதிர்வீச்சிலிருந்து நம்மை இத்தனை காலமாக எப்படி பாதுகாக்கிறது என்பது பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். குறிப்பாக பூமியின் காந்தப்புலம் பற்றி நிச்சயம் படித்திருப்போம். இருப்பினும், விண்வெளி ஆராய்ச்சி குழுவின் சமீபத்திய அறிக்கையின்படி, பூமியின் காந்தப்புலம் தற்பொழுது பலவீனமடைந்து வருகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் யாருக்கு பாதிப்பு என்று தெரிந்துகொள்ளலாம்.

பூமியின் காந்தப்புலம் பலவீனம் அடைந்துள்ளது!

விண்வெளி ஆராய்ச்சி குழுவின் சமீபத்திய அறிக்கைகளின்படி, பூமியைச் சுற்றியுள்ள காந்தப்புலம் பலவீனம் அடைந்துள்ளது. பூமியின் காந்தப்புலம் சராசரியாக, கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் இல்லாத அளவிற்கு, சுமார் 10 சதவீதம் அதன் வலிமையை இழந்துள்ளது. இருப்பினும், ஆப்பிரிக்காவிற்கும் தென் அமெரிக்காவிற்கும் இடையிலான ஒரு நீளமான தெற்கு அட்லாண்டிக் முரண்பாட்டில் விரைவான சுருக்கம் காணப்படுகிறது

50 ஆண்டுகளில் மேற்கு நோக்கி நகர்ந்து மாறியது 

கடந்த 50 ஆண்டுகளில் இந்த பிராந்தியத்தில் ஒரு பெரிய மற்றும் விரைவான சுருக்கம் காணப்படுகிறது, அதேபோல் இப்பகுதி வளர்ந்து மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், ஸ்வர்ம் செயற்கைக்கோள் உதவியுடன் பூமியின் காந்தப்புலம் பற்றிய தகவல்களைச் சேகரித்துள்ளது. ஸ்வர்ம் செயற்கைக்கோள்கள் பூமியின் காந்தப்புலத்துடன் ஒன்றிணைக்கும் பல்வேறு காந்த சமிக்ஞைகளை அடையாளம் காண முடியும்.

குறைந்தபட்ச காந்தப்புலம் கொண்ட பகுதி இது தான்

கடந்த ஐந்து ஆண்டுகளில், குறைந்தபட்ச தீவிரத்தின் இரண்டாவது மையமாக ஆப்பிரிக்காவின் தென்மேற்கு புகுதிகளில் உருவாகியுள்ளது. காந்தபுலத்திலன் இந்த ஒழுங்கின்மை இரண்டு தனித்தனி கலங்களாகப் பிரிக்கப்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். காந்தப்புலம் பலவீனமடைவதும் கிரகத்தைச் சுற்றும் செயற்கைக்கோள்கள் மற்றும் விண்கலங்களுக்குத் தொழில்நுட்ப சிக்கல்களை ஏற்படுத்துகிறது.

தெற்கு அட்லாண்டிக் ஒழுங்கின்மையின் வளர்ச்சி

தெற்கு அட்லாண்டிக் உருவாகும் காந்தப்புலத்தின் ஒழுங்கின்மை கடந்த தசாப்தத்தில் தோன்றியது, ஆனால் கடந்த சில ஆண்டுகளில் தீவிரமாக இது வளர்ச்சியடைந்துள்ளது என்று புவியியலுக்கான ஜெர்மன் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த டாக்டர் ஜூர்கன் மாட்ஸ்கா கூறினார். தெற்கு அட்லாண்டிக் ஒழுங்கின்மையின் வளர்ச்சியைக் கண்காணிக்க ஸ்வர்ம் செயற்கைக்கோள் அட்லாண்டிக் சுற்றுப்பாதையில் வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

பூமியின் கோர் மையப்பகுதி

இந்த மாற்றங்களுக்கு முக்கிய காரணமாகப் பூமியின் கோர் மையப்பகுதி இருக்கிறது. காந்தப்புலத்தில் உண்டாக்கும் மாற்றங்கள் பூமியின் மையத்தில் உள்ள செயல்முறைகளைப் புரிந்துகொள்வதை இப்போது சவாலாக்கியுள்ளது என்றும், இதற்குப் பின்னால் மிகவும் ஊகிக்கப்பட்ட ஒரு காரணம் என்னவென்றால், பூமியின் துருவ மாற்றத்திற்கான நேரம் நெருங்கி வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

துருவத்தின் தலைகீழ் மாற்றம்

துருவத்தின் தலைகீழ் மாற்றம் என்பது வடக்கு மற்றும் தெற்கு காந்த துருவங்கள் புரட்டும்போது நடக்கும் ஒரு நிகழ்வாகும். இந்த தலைகீழ் மாற்றம் உடனடியாகவோ அல்லது திடீரெனவோ ஏற்படாது, இது பல நூற்றாண்டுகளாக நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துருவ மாற்றக் காலகட்டத்தில், கிரகத்தைச் சுற்றிலும் பல வடக்கு மற்றும் தெற்கு காந்த துருவங்கள் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இது முதல் முறை அல்ல

துருவ தலைகீழ் மாற்றம் பூமியில் நடப்பது என்பது நிச்சயமாக இது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இந்த நிகழ்வு நமது கிரகத்தின் வரலாற்றில் சில தடவைகள் நிகழ்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

250,000 வருடங்களுக்கு ஒரு முறை

மேலும் இந்த தலைகீழ் மாற்றங்கள் தோராயமாக ஒவ்வொரு 250,000 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் என்றும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். பூமியின் இந்த மாற்றம் யாருக்கெல்லாம் பாதிப்பை உருவாக்கும் என்று பார்க்கலாம்.

மனிதக்குலத்தைப் பெரிதும் பாதிக்குமா?

இந்த மாற்றம் மனிதக்குலத்தைப் பெரிதும் பாதிக்கவோ அல்லது எச்சரிக்கவோ செய்யப்போவதில்லை என்பதே உண்மை. ஆனால், இந்த மாற்றம் பல்வேறு செயற்கைக்கோள்கள் மற்றும் விண்கலங்களுக்குத் தொழில்நுட்ப சிக்கல்களை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், காந்தப்புலம் பலவீனமடைவதால், அண்டத்திலிருந்து சார்ஜ் செய்யப்பட்ட துகள்கள் குறைந்த பூமியின் உயரங்களுக்குள் ஊடுருவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google+ Linkedin Youtube