டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310எஸ் ஸ்போர்ட்ஸ் பைக்

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான டிவிஎஸ் தற்போது புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310எஸ் ஸ்போர்ட்ஸ் பைக்-கை களம் இறங்க உள்ளது. இப்புதிய பைக்கின் முன்புறத்தில் அப்சைடு டவுன் போர்க்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பர் கொடுக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் மட்டும் டிஸ்க் பிரேக் ஆப்ஷன் இருக்கிறது. இந்த பைக்கின் வால் பகுதி, அப்பாச்சி ஆர்டிஆர் 2004வி பைக்கின் வால் பகுதியை போன்று இருக்கிறது. ஸ்பிளிட் இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. 

இப்புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310எஸ் பைக்கில் சிங்கிள் சிலிண்டர் கொண்ட 313சிசி லிக்யூடு கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக இந்த இன்ஜின் 34 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன்கொண்டது. அடுத்த மாதம் இப்புதிய டிவிஎஸ் ஸ்போர்ட்ஸ் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. ரூ.2 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310எஸ் பைக் மாடலானது, கேடிஎம் ஆர்சி390, ஹோண்டா சிபிஆர் 250ஆர் உள்ளிட்ட பைக் மாடல்களுடன் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Google+ Linkedin Youtube