பேய்கள் உலவுவதாகக் கூறப்படும் அமானுஷ்ய ரயில் நிலையங்கள்

சம்பந்தமே இல்லாமல் அதுபோன்ற பகுதிகளைக் கடக்கும் போது நம் மனதுக்குள் பயம் தொற்றிக் கொள்வதுண்டு. ஆனால் உண்மையிலேயே அந்த பகுதிகளில் கண்ணுக்குத் தெரியாத ஆவிகள் உங்கள் பின்னால் சுற்றிக்கொண்டிருந்தால் எப்படி இருக்குமென்று கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். 

திகிலில் கை, காலெல்லாம் நடுங்க ஆரம்பித்துவிட்டதா?  ஆனால் நிஜமாகவே 24 மணிநேரமும் பேய்கள் உலாவிக் கொண்டிருக்கும் சில ரயில் நிலையங்கள் இந்தியாவில் உண்டு. அவை எங்கெங்கு உள்ளன என்று பார்ப்போம். 

இந்தியாவில் பேய்த்தொல்லை நிறைந்த ரயில் நிலையங்கள்

பெகுன்கூடோர், மேற்கு வங்காளம்

இந்த ரயில் நிலையம் 1967 - இல் திறக்கப்பட்டது. கடந்த 40 வருடமாகவே இங்கு ஒரு பெண் பேய் உலாவிக் கொண்டிருப்பதாக, அப்பகுதியில் இருக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர். 

அவர்களில் பெரும்பாலானோர் அந்த பேயைப் பார்த்து அலறி ஓடி வந்ததாகவும், இரவு நேரங்களில் வெள்ளை நிறப் புடவையில் அந்த ஆன்மா இங்கு சுற்றித் திரிவதாகவும் கூறப்படுகிறது. ரயிலில் எப்போதோ அடிபட்டு இறந்து போன அந்தப் பெண்ணின் ஆவி, வெளியே செல்லாமல் இங்கேயே சுழன்று கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

சோஹாக்ப்பூர் ரயில்நிலையம், 

மத்தியப் பிரதேச மாநிலத்தில் அமையப்பெற்றுள்ள இந்த ரயில் நிலையம்  அமானுஷ்யங்கள் நிறைந்த ரயில் நிலையங்களில் ஒன்றாக இருக்கிறது.அந்த பகுதிகளில் அதிகாலை நேரங்களில் அடிக்கடி கூக்குரல் கேட்டுக் கொண்டே இருக்குமாம். 

குரல் கேட்கும் திசையை நோக்கிச் சென்றால், அந்த குரலின் விசும்பல் சத்தம்கூட அதிகரிப்பது எல்லோருக்குமே நன்கு கேட்கிறது. ஆனால் அந்த இடத்தை அடைந்ததும் அங்கு யாருமே இருப்பதில்லையாம்.சில சமயங்களில் அந்த குரலைத் தேடிப் பின் தொடர்பவர்களை அந்த ஆவி வெகு தூரத்துக்கு அழைத்துச் சென்றுவிடுமாம்.

 அப்படி நிறைய பேர் வழி தவறிப் போய்,பின்னால் வேறு யாரேனும் போய் வீட்டுக்கு அழைத்து வந்து விடுகிற கதையும் அங்கு நிகழ்வதுண்டு.சூரியன் மறைந்து இருட்டியபின் பெரும்பாலும் அப்பகுதியில் யாரும் செல்வதில்லை.

அந்த ரயில் நிலையத்தில் மக்கள் நடமாட்டம் மிகக் குறைவு என்பதால்,அந்த வழியில் தனியாகச் செல்ல பலரும் அஞ்சுகிறார்கள்.அப்படியே சென்றாலும் திகிலூட்டும் சத்தங்களும் கத்தியை எடுத்துக் கொண்டு யாரோ பின் தொடர்வது போன்ற பிரம்மையும் உண்டாகிறதாம். 

குழி நீர் நிலையம், 

மத்தியப் பிரதேசத்தில் உள்ள கந்த்வா அருகில் தான் இந்த குழிநீர் ரயில் நிலையம் உள்ளது.பிரிட்டிஷ் காலத்தில் இந்த இடம் போராட்ட களமாக இருந்ததால் இதை சண்டைக்குழி என்றும் அழைக்கிறார்கள். 

இந்த இடத்தில் பல  ஆண்டுகளுக்கு முன்பாக,நீர்  குண்டு வீசப்பட்டு பெரிய பள்ளம் உண்டானதால், இந்த இடம் குழிநீர் நிலையம் என்று அழைக்கப்படுகிறது.இங்கு இறந்துபோன பலரது ஆன்மாவும் இங்கு உலாவுவதாகவும் அந்த வழியே செல்பவர்களை சில சமயம்  திடீரென ஏதேனும் ஒரு குரல் அழைத்து தண்ணீர் கேட்பது, வண்டியில் லிப்ட் கேட்பது ,திடீரென அந்த பகுதியை விட்டு மறைந்து போவது ஆகிய சம்பவங்கள் நிகழ்கின்றன.

அதனால் அப்பகுதியில் மாலை 7 மணிக்கு மேல் செல்பவர்குள் பீதியில் உறைந்து போ்ய தான் வீட்டுக்கு வந்து சேருகிறார்கள். 

ஸ்டேஷன் மாநிலம், சித்தூர், ஆந்திரப் பிரதேசம்

ஆந்திர மாநிலம் சித்தூர் ரயில் நிலையத்தில் அந்தப் பகுதியில் "மத்திய ரிசர்வ் போலீஸ் படை அதிகாரியாகப் பணியாற்றி இறந்து போன ஹரி சிங்கின் ஆன்மா அலைந்து திரிந்து கொண்டிருப்பதாக அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர்.

அவர் பணியில் இருந்த போது,ரயில் ரவுடிகளால் ரயிலில் தள்ளி கொலை செய்யப்பட்டார்.பல ஆண்டுகளாகியும் அவருடைய ஆவி அங்கேயே சுழன்று கொண்டிருக்கிறதாம்.

ரவீந்திர சரோவர் மெட்ரோ ரயில் நிலையம்

இரவு நேரங்களில் அந்த வழியே கடந்து செல்லும் ரயிலில் அவ்வப்போது அடையாளம் தெரியாத நபர்கள் மோதி இறந்து கிடப்பதுண்டு. 

அதேபோல், அந்த ரயில் நிலையத்துக்கு அருகாமையில் திடீரென மின்கம்பிகள் அறுந்து விழுந்து,பலர் இறந்து போயிருக்கிறார். ஆனால் காலையில் விடிந்ததும் பார்த்தால் மின் கம்பிகள் அறுந்ததற்கான எந்த தடமும் அங்கு இருக்காதாம்.

இதுபோன்ற திகிலூட்டும் சம்பவங்கள் அப்பகுதியில் அடிக்கடி நடப்பதுண்டு. இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதால் அப்பகுதி மக்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்களாம். 

பரோக் நிலையம், சிம்லா

கால்காவில் இருந்து சிம்லா செல்லும் இந்த ரயில் பாதை பல மலைகளைக் குடைந்து, பாறைச் சுரங்கங்களுக்கு இடையில் அமைக்கப்பட்டிருக்கும். 

இந்த சுரங்கப் பாதைக்குள் பலர் கொன்று தூக்கியெறியப்பட்டும் பலர் தற்கொலை செய்தும் இறந்திருக்கிறார்கள்.இந்த பகுதியில் மட்டும் 33 சுரங்கப்பாதைகள் இருக்கின்றனவாம்.

இந்த பகுதியில், ரயில்வே நிலையத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த சில பொறியாளர்களும் காரணமே இல்லாமல் தற்கொலை செய்து கொண்டு இறந்திருக்கிறார்கள். 

அவர்களுடைய ஆன்மா தான் இப்பகுதியில் ஆவியாக சுழன்று கொண்டிருக்கிறது என்று கூறப்படுகிறது. 


Google+ Linkedin Youtube